வட மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன!

வடமாகாண பிரதம செயலாளராக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக பணிபுரிந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.

இந்நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு, வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *