ஓயாத அலைகள் நடவடிக்கையில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி

1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் உயிரிழந்த 1169 படையினருக்கு இராணுவத்தினர் நேற்று(19) அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ படைத்தளம் மீது 1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் ஓயாத அலைகள் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 400 க்கு மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் போராளிகள் மரணித்துள்ளதுடன், இலங்கை இராணுவப்பிரிவின் சிங்கறெஜிமன்ட்,விஜயபாகு றெஜிமன் படைப்பிரிவினை சேர்ந்த 1169 இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

இந்திலையில், இவ்வாறு உயிரிழந்த 1169 படையினர் நினைவாக முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத்தூபியில் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் நினைவாக 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரால் சிசிர பிலப்பிட்டிய உள்ளிட்ட படைத்தபளபதிகள் அதிகாரிகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

இதன்போது கொக்குளாய் விகாரையின் விகாராதிபதியினால் உயிரிழந்த படைவீரர்களுக்காக பிரித்ஓதி தானம் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வணக்கம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் நடவடிக்கையில் உயிரிழந்த இராணு வீரர் ஒருவரின் மகன் தற்போது ஒரு இராணுவ அதிகாரியாக நினைவு இடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த படையினருக்கு வணக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *