யாழ்ப்பாணத்தில் ஆபத்தான கொவிட் வைரஸ் கண்டுபிடிப்பு

இலங்கையில் மேலும் 19 பேருக்கு டெல்டா வகை கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, பிலியந்தல, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் பெற்றுக் கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் நாட்டில் 38 பேருக்கு டெல்வா வகை கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *