மாவையின் மகன் திடீர் முடிவு! மேலும் பல இளைஞரணியினர்களும் வெளியேற்றம்

இலங்கை தமிழ் அரசு கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும், சே.கலையமுதன் விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

கலையமுதன் மட்டுமல்லாது, கட்சியின் இளைஞர் அணி முக்கியஸ்தர்கள் சிலரும் கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகுவதற்காக கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் த.சுதர்சன் தனது விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அடுத்த சில தினங்களில் இன்னும் சில இளைஞரணி பிரமுகர்கள் தமது விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளனர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் மகன் கலையமுதன் கட்சியின் இளைஞரணி இணைப்பாளர், மத்தியகுழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் த.சுதர்சனும் தனது விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையை குறிவைத்துள்ள சி.சிறிதரன், கலையமுதனின் இருப்பு கட்சிக்குள் தனக்கு நெருக்கடி தரலாமென்பதால், அவர் மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து சமீபத்தில் ஊடக சந்திப்பில் வாரிசு அரசியல் என வெளிப்படையாக கூறிய நிலையில் கலையமுதன் இம் முடிவை எடுத்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் யாழ் தேர்தல் தொகுதியில் சிறிதரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் மற்றையவர் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் வருவதாக உத்தேசித்த கால அளவு நெருங்கி வரும் நிலையில் மாவையை டம்மியாக்கும் செயற்பாட்டின் ஆரம்பமாக இவ் உளவியல் யுத்தம் ஆரம்பிக்கப் பட்டு வெற்றி கொள்ளப் பட்டுள்ளது.

இதன் நீட்சியாக மாவையை இரண்டில் ஒன்று பார்ப்பதற்காக இந்த கூட்டணி, தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையில் கொழும்பில் சம்பந்தன் ஏற்பாடு செய்துள்ளனர், பார்ப்பம் தம்பி, இருப்பம் தம்பி, ஒற்றுமை தம்பி எனக் கூறும் மாவையின் கதிரையைக் காலி செய்த தமிழரசுக் கட்சியின் மாற்று அணி மாவையை அரசியலில் இருந்து ஓரங் கட்டாமல் ஓயப் பேவதில்லை என சபதம் எடுத்துள்ளனர், அதற்கு ஆதாரமே நேற்று சற்கர நாற்காலில் தலைவர் சென்று வரவு பதிந்த சம்பவம்.

ஒட்டு மொத்தத்தில் மாவையின் அரசியல் எதிர்காலம் மாவையின் முடிவுகளைப் பெறுத்தே முக்கியம் பெறும், கட்சி ஒற்றுமை, தந்தை செல்வாவின் கட்சி என பழமை பேசிக் கொண்டிருந்தால் கட்சியில் மாவை காணாமல் போய் விடுவார்.

இவ்வாரான நிலையில் கட்சிக்குள் பலத்த எதிர் பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதால், கட்சிக்குள் அசௌகரியத்தை சந்தித்து வந்தார் கலையமுதன். இது தவிர, கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த இளைஞர்கள் புதிய வழிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதாக நம்பகமாக அறியக் கிடைக்கிறது. இதற்கான முன்னெடுப்பாகவே இந்த விலகல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *