நோயாளி போல் இருக்கின்றார்: கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி

சமீபத்தில் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தற்போது கீர்த்திசுரேஷையும் வம்புக்கு இழுத்துள்ளார். மேலும் நடிகை சாய்பல்லவியை பாராட்டியும் கருத்து வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் போனிகபூர் தயாரிக்கும் இந்தி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். ஆனால் அவரது மெலிந்த உடலமைப்பை நடிகை ஸ்ரீரெட்டி கேலி செய்துள்ளார். கீர்த்திசுரேஷ் செல்லும் விமானம் ஒன்றில் தானும் பயணம் செய்ததாகவும், நான் உள்பட கீர்த்தி சுரேஷை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், ஆனால் ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுத்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கீர்த்தி சுரேஷ் மெலிந்து காணப்படுவதால் நோயாளி போல இருப்பதாகவும், ‘நடிகையர் திலகம்’ படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்கு இயக்குநர் தான் காரணம் என்றும் கீர்த்தி சுரேஷுக்கு எந்த திறமையும் கிடையாது என்றும் கூறி அவரை வம்புக்கு இழுத்துள்ளார். மேலும் தற்போதைய நடிகைகளில் சாய் பல்லவி தான் சிறப்பாக நடிக்கிறார்’ எனவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த கருத்துக்கு கீர்த்திசுரேஷின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *