பிரபல நடிகரின் மனைவி கொரோனாவால் பலி!

நடிகர் ஹம்சர்வர்தனின் மனைவி சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் 70 களின் வெள்ளிவிழா நாயகன் என அழைக்கப்பட்டவர் நடிகர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹம்சவர்தன். இவரது மனைவி (42) இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகள்களும் உள்ளனர். கடந்த மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு உறவினர்கள், திரைப்பட கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *