ரவுசு.. ரகளை.. அரசியல்.. காமெடி..! – ஆர்.ஜே.பாலாஜி பிறந்தநாள்!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஆர்கே பாலாஜியின் பிறந்தநாள் இன்று.

ரேடியோ சேனல்களில் தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்குள் துணை கதாப்பாத்திரங்கள் மூலமாக அறிமுகம் ஆனவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோ தொகுப்பாளராக இருந்ததால் இடைவிடாமல் தொணதொணக்கும் அவர் பேச்சு தமிழ் சினிமா காமெடியில் அவருக்கென தனி அடையாளத்தை தந்தது.

தொடர்ந்து அரசியல் ரீதியான பொது விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வரும் ஆர்ஜே பாலாஜி, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்டவற்றிலும் ஆதரவு தெரிவித்திருந்தார். இயக்குனராக மூக்குத்தி அம்மன் போன்ற மத அரசியலை பகடி செய்யும் படங்களையும் எடுத்து தமிழ் சினிமாவில் தனது அடையாளத்தை பதித்துள்ளார். கலாய் காமெடியில் அசத்தும் ஆர்ஜே பாலாஜியின் பிறந்தநாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *