யாழ் சுன்னாகத்தில் சிக்கிய பெரும் தொகை போத்தல்கள்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பயணக்கட்டுப்பாட்டு சமயத்தில் வீட்டில் வைத்து விற்பனை செய்வதற்காக குறித்த மதுபான போத்தல்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மதுபான நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மதுபானத்தை வீட்டில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஏனைய இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் இரகசிய தகவல்களை வழங்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *