யாழ்.காங்கேசன்துறையில் புத்தர் சிலையை உடைத்த இளைஞருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார்.

புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த கொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

குறித்த இளைஞன் மது போதையில் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க முடியவில்லை என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *