யாழில் பிரபலமான ஆசிரியர் அன்பழகன் காலமானார்!

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்த யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வே.அன்பழகன் (வயது-47) இன்று காலை கொழும்பில் காலமானார்.

யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், செட்டித்தெரு மெதடிஸ்த தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியரும் ஆவார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகி கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அன்பொளி கல்வியகத்தில் கல்விபயில்வதற்காக ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்பொளி புலமைப்பரிசில் மாதிரி மற்றும் வழிகாட்டிகள் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பை பெற்றிருந்தது.

இவரின் வழிகாட்டல் நூல்களை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணப் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *