தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் – இலங்கை அரசு வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிவிப்பு

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300இற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியிடப்பட்ட இது தொடர்பான விசேட வர்த்தமானி வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களை கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரை இலங்கை அரசு தடை செய்துள்ளது.

இந்த தடை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் இவ்வாறு அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *