இந்திய அணி சூப்பர் வெற்றி… டி-20 தொடரைக் கைப்பற்றியது !

ஐந்தாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி அடைந்தது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றுபெற்றுள்ளன.

எனவே இன்று குர்ஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் 5 வது மற்றும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று யார் தொடரைக் கைப்பற்றப்போகிறார்கள் என ஆர்வம் எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தப் போட்டிகளைக் கண்டுவருகின்றனர். இதில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. இந்தியா பேட்டிங்கில் பட்டாசு கிளப்பியது. ரோஹித் சர்மா 64 ரன்களும், விராட் கோலி 80 ரன்களும், ஹர்திக் பாண்டியா 39 ரன்களும் அடித்தனர். சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் இந்திய அணியில் ஸ்கோர் 20 ஓவர்கள் முடியில் 224 அடித்து, இங்கிலாந்துக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தக் கடினமாக இலக்கை நோக்கிப் போராடிய இங்கிலாந்து அணி
கடைசிக்கட்டத்தில் 36 வித்தியாத்தில் தோற்றது. மொத்தம் 20 ஓவர்களின் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து.

எனவே இந்திய அணி 3 -2 என்ற கணக்கில் இந்த டி-20 தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *