இலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி!

இலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது.

விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும் திரும்பிப் பார்த்துள்ளனர்.

Digital Eagle Portable drone jammer என அழைக்கப்படும் அந்த துப்பாக்கி சண்டைக்கு பயன்படுத்தப்படும் சன்னங்கள் பறக்கும் துப்பாக்கி அல்ல எனவும் அது டிஜிட்டல் முறையில் எதிரிகளின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒன்று எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ட்ரோனுக்கும் அதனை இயக்குபவருக்கும் இடையிலான எந்தவொரு தகவல் தொடர்புகளையும் இந்த துப்பாக்கி காற்றலை வாயிலாக சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி டிரோனுக்கும் ரிமோட் கன்ரோல் வைத்திருக்கும் மனிதனுக்குமிடையில் உள்ள தொடர்பாடலை துண்டித்து குறித்த டிரோன தரையில் விழவைக்கும் சக்தி இதற்கு உண்டு.

ஐந்து அதிர்வெண்களில் இயங்கும் வல்லமைகொண்ட இந்த துப்பாக்கி கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர்களுக்கு வீச்செல்லை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பயன்படுத்த பயிற்சி எடுப்பவர் சாதாரணமாக மற்ற தாக்குதல் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதுபோலன்றி மிகவும் குறைந்த நேரத்தில் பழகிக்கொள்ளமுடியும்.

அதுமாத்திரமன்றி கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்கள்வரை இதன் மின்சக்தி நின்றுபிடிக்கும் தன்மை கொண்டதாகும்.

அமெரிக்க வான்படை பயன்படுத்திய இந்த துப்பாக்கி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாகும். தற்போது இலங்கையின் காலிமுகத்திடலில் இந்திய விமானங்களின் சாகச நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் அவற்றுக்கு டிரோன் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த துப்பாக்கிகளுடன் பல விமானப்படை கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *