பேரணியில் கலந்து கொண்ட கூட்டமைப்பினர் மீது யாழில் வழக்கு தாக்கல்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், இரா.சாணக்கியன், யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியாக பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நுழைந்தமைக்காக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அத்துடன் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிசார் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிதிமன்ற உத்தரவை மீறியதாக பல அரசியல் பிரமுகர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *