கிளிநொச்சியில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர்
கிளிநொச்சி 57 படைப்பிரிவின் ஏற்பாட்டில் விசேட பொங்கல் வழிபாடு இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகமும், 57வது படைப்பிரிவும் இணைந்து பொங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சம்பத்கொற்றுவேகொட 57 ஆவது படைப்பிரிவின் தலைைமை அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கொரோனாவில் இருந்து நாடு விடுபட்டு, அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.