யாழ்.திருநெல்வேலிச் சந்தையில் வெடிகள் விற்பனை செய்த சிங்கள வியாபாரிகளுக்கு நடந்த கதி! (படங்கள்)

யாழ்.திருநெல்வேலி சந்தையில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் நல்லூர் பிரதேசசபையினரால் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

நல்லுார் சந்தை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் சந்தையை சூழ பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதி பகுதிகளில் பொங்கல் வியாபாரம் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் தென்னிலைங்கையிலிருந்து வந்து யாழ்.மாவட்ட வியாபாரிகளுடன் இணைந்து சில வியாபாரிகள் வெடி மற்றும் பானை வியாபாரம் செய்துவருவதாக நல்லூர் பிரதேசசபை தவிசாளர் மயூரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொலிஸாருடன் இணைந்து நடத்திய சோதனையில் 3 நாட்களுக்குள் பீ.சி.ஆர் பரிசோதனை செய்து அதன் அறிக்கை வைத்திருக்காத அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், அவர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் பிரதேசசபையினால் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *