ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

நீதிமன்றை அவமதித்ததற்காக முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதியரசர்கள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் உத்தரவை ஏகமனதாக நிறைவேற்றியது.

தீர்ப்பை அறிவித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வின் தலைமை நீதியரசர் சிசிர டி அப்ரூ, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபர் சுமத்திய நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

அதன்படி, ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு கடூழியத்துடன் கூடிய நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதியரசர் தீர்ப்பளித்தார்.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதியன்று அலரிமாளிகையில் நடந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ரஞ்சன் ராமநாயக்க, இந்த நாட்டில் பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஊழல் மிக்கவர்கள் என்று கூறியிருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி நீதித்துறையை அவமதித்துள்ளார் என்று சட்ட மா அதிபரால் குற்றஞ்சாட்டப்பட்டது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *