மர்மான முறையில் ஆயிரக்கணக்கான பறவைகள் திடீர் மரணம்! அதிகாரிகள் குழப்பம்

புத்தளத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வனாத்தவில்லு, எலுவான்குளம், ரால்மடுவ வயல்நிலப் பகுதியிலுள்ள வயல் நிலங்களில் இவ்வாறு உயிரிழந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்படவில்லை என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பறவைகளின் மரபணு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவர் வைத்தியர் இசுரு கோட்டேகொட தெரிவித்து்ளார்.

இந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறிகள் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் இந்த வயல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து கிடந்துள்ளது.

வீட்டு குருவி, நெல் குருவி உட்பட பல வகையான பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பறவைகள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *