யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

பிங்கர் பிரிண்ட் இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர் செய்ய வேண்டுமென்று தெரிவித்து ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.மாநகர சபை ஊழியர்கள் கவனீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இயந்திரம் அண்மையிலேயே பொருத்தப்பட்டதாகவும் அது தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், அதனைத் திருத்துவதற்காக 300 ஊழியர்களிடம் தலா 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த இயந்திரத்தினை அனைத்து ஊழியர்களும் பயன்படுத்துவதால் கொரோனா பரவும் அபாயம் காணப்படுவதாகப் பல தடவைகள் தெரிவித்தும் நிர்வாகத்தினர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,மாநகரசபை நிர்வாகத்தின் இயந்திரம் செயலிழந்தால் அதனைத் திருத்துவதற்கு நிர்வாகத்தின் பணத்தினை செலவிடவேண்டுமே தவிர, எதற்காக ஊழியர்களின் பணத்தினை எடுக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

உயர் அதிகாரிகளின் பாவனையில் உள்ள இலத்திரனியல் பொருட்கள் பாதிப்படைந்தால் அவற்றைச் சீர் செய்வதற்கு அவர்களின் பணம் பெறப்படுகின்றதா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *