தந்தை முல்லைத்தீவில்; விபத்தில் தாயும்- மகனும் பலி!

அநுராதபுரம், மஹாவ பகுதியில் விபத்தை ஏற்படுத்தி, தாயையும், மகனையும் கொன்ற சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி பஹலபல்ல பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் 32 வயது பெண்ணும் அவரது மூன்றரை வயது மகனும் கொல்லப்பட்டதாக மஹவ பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர்கள் அதே பகுதிய சேர்ந்த ஏ.எம். இரங்கனி (32), கே.ஏ. தனஞ்சய ஜோஹன் குருவிட்ட (மூன்றரை வயது) என்றும், பெண்ணின் கணவர் முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் என கூறப்படுகின்றது.

தாயும் மகனும் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அனுராதபுரம் நோக்கிச் சென்ற வாகனம் மோதி உயிரிழந்தனர்.

இதன்போது இருவரும் சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதவாச்சியிலிருந்து 11 புகையிரத திணைக்கள ஊழியர்களை ஏற்றிக் கொண்டு கொழும்புக்கு சென்று கொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளான நிலையில் வாகன சாரதி தப்பி ஓடிவிட்டார்.

எனினும், நேற்று முன்தினம் (16) காலை அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் வண்டியில் பயணித்த பத்து புகையிரத திணைக்கள ஊழியர்களும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து நடந்த நேரத்தில் சாரதி குடிபோதையில் இருந்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு சென்று திரும்பிச் சென்று கொண்டிருந்த போதே தாயும் மகனும் விபத்தில் சிக்கினர்.

இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கொந்தளித்ததுடன் வாகனத்தில் பயணித்தவர்களை கடுமையாக தாக்கி நிலையில் தப்பியோடியதாக சாரதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *