உலகில் முதல் முறையாக அமைக்கப்பட்ட 360 டிகிரி நீச்சல் குளம்.. எங்கு தெரியுமா?.. வைரல் புகைப்படம்..!

உலகிலேயே முதல் 360 டிகிரி நீச்சல் குளம் லண்டனில் துவங்கிய நிலையில் இணையத்தில் அதுகுறித்து புகைப்படங்கள் பரவி வருகிறது.

55 அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடியால் ஆன நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் 4 சுவர்களுமே கண்ணாடியால் ஆனவை.

அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே நீராடும் வகையில் நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்துக்குள் எப்படி செல்வது என்பது தான் இணையதளவாசிகளின் மிகப்பெரிய கேள்விக்குறியாகவுள்ளது.

தங்களது 360 டிகிரி நீச்சல் குளப் புகைப்படங்கள் வெளியாகி பகிரப்படுவது கண்டு மகிழ்ச்சியடைந்த காம்பஸ் நீச்சல் குளக் கட்டமைப்பு நிறுவனத்தின் இயக்குனர் அலெக்ஸ் கெல்லி, சுழலும் படிக்கட்டுக்கள் நீச்சல் குள தரையில் இருந்து மனிதர்களை தூக்கிச் செல்லும் என்றும், குளத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் ஒரு பொத்தானை அழுத்தினால் அந்தப் படிக்கட்டு வந்து அழைத்துச் செல்லும் என்றும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *