யாழ்ப்பாணத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொக்குவில் 1, தெல்லிப்பழை 3, அளவெட்டி 2, உரும்பிராய் 1, நவாலி 1, கீரிமலை 2, மானிப்பாய் 2, உடுவில் 2, இணுவில் 2, சங்கானை 1, பண்டத்தரிப்பு 1, சுன்னாகம் 2, கைதடி 1, ஏழாலை 3, காங்கேசன்துறை 1, சண்டிலிப்பாய் 1 என 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்த போதும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அதனை மறுத்ததுடன், யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் 2 பேருக்கும் உறுதி செய்யப்பட்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *