01. 12. 2020 இன்றைய இராசிப்பலன்

மேஷம்

இன்று பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள்.

ராசி பலன்கள்

ரிஷபம்

இன்று பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின் கை கூடி மகிழ்ச்சியளிக்கும்.

மிதுனம்

இன்று சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள.

கடகம்

இன்று தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

சிம்மம்

இன்று தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று பண வரவுகளில் சரளமான நிலை உண்டாகும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது செல்லவும். புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

தனுசு

இன்று செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.

மகரம்

இன்று பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும்.

கும்பம்

இன்று பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

மீனம்

இன்று புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *