நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப்பறிக்கவே முடியாது! சந்திரிகா தெரிவிப்பு

இலங்கையில் போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் இருக்கவே கூடாது. எனவே, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

போரில் இறந்த உறவுகளை நினைவுகூர அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *