வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உழவர் சந்தையை உருவாக்குமாறு கோரிக்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், உழவர் சந்தையை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே அவரின் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இதில் மிக முக்கியமாக, மரக்கறி சந்தைகளுக்கு எடுத்துவரப்படுகின்ற விளைபொருட்களுக்கு பத்து வீத கழிவுகள் பெறப்படுகின்றன.
எனினும் தம்புள்ளையில் இருந்து கொண்டு வரப்படும் மரக்கறிளுக்கு கழிவுகள் எவையும் பெறப்படுவதில்லை.
இது உற்பத்தி செய்பவரை விட இடைத் தரகர்களும் ஏனைய வியாபாரிகளும் கொள்ளையில் ஈடுபடும் ஒரு நடவடிக்கையாகும்.
எனவே உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர் ஊடாக உழவா சந்தைமுறை செயற்படுத்தப்பட வேண்டும்.
இதன்போது உழவர்களே நேரடியாக தமது பொருட்களை விற்பனை செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.
இந்தமுறை தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல கருணாநிதியினால் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.