கிளிநொச்சியில் மாதிரி கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைப்பு

கிளிநொச்சி – தம்பலகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர் மற்றும் சஞ்சீவிநகர் ஆகிய மாதிரி கிராமங்கள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த மாதிரி கிராமங்களை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 32 பயனாளிகளுக்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், இந்த நிகழ்வில் வைத்து கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டுள்ளன.

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *