டாக்டர் படத்தின் ரிலீஸ் அப்டேட்.. ஆவலுடன் காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா தாகத்திற்கு பின் துவங்கி முடிந்துள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் டப்பிங் கூட முடிவடைந்தது.

இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின.

ஆனால் தீபாவளிக்கு டாக்டர் படக்குழு வெளியிட்ட போஸ்டரில் படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *