சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு; யாழில் சீல் வைக்கப்பட்ட ஆலயம்

யாழ்.வடமராட்சி – கம்பர்மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி வழிபாடுகள் நடத்தியதால் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், பூசகர் மற்றும் பூசையில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இந்த பூசை வழிபாடு இடம்பெற்ற நிலையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையினால் சுகாதார பிரிவினர் ஆலயத்திற்கு சீல் வைத்தனர்.

அத்துடன் ஆலயத்திற்குள் 14 நாட்கள் யாரும் உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலய பூசகர் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட பக்தர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *