யாழில் வாள் வெட்டு நாடாத்திய ஐயர்….!! (Video)

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள உயரப்புலம் உத்துங்கன் பிள்ளையார் ஆலயத்தில் வாழைவெட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றிருந்தது.

அங்கு ஒரு பூசகர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற வாழைவெட்டு நிகழ்வின்போது பூசகர் இரு வாள்களுடன் குறளிவித்தை காட்டும் காணொளியும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் அப் பகுதி மக்களிடம் கேட்டபோது, இச் சம்பவத்துக்கு ஆலய நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பூசகர் திடீரென வந்து இவ்வாறு வீரசாகசம் காட்டியதுடன், பூசகர் வாளால் வெட்டிய இளைஞன் ஆலய வழிபாட்டுக்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சைவ வழிபாட்டில் சேறு பூசும் இவ்வாறானவர்கள் மீது யாழ்ப்பாணம் சைவமகா சபை விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.facebook.com/watch/?v=372437153881133


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *