புங்குடுதீவு பெண்ணை ஏற்றிவந்த பருதித்துறை பேருந்து நடத்துநருக்கு கொரோனா!

கம்பஹா ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி புங்குடுதீவு திரும்பிய கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய பெண்ணை ஏற்றிவந்த பருதித்தித்துறை அரச பேருந்து நடத்துநருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டுமுறை மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே அவருடைய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த நபரே தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *