யாழ்.மாவட்டம் இப்போதும் ஆபத்தில் உள்ளது; யாழ்.மாவட்ட செயலர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகி யிருக்கிறார்கள்.

கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது. PCR பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

எனினும் யாழ்.மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு கொரோனா தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைவரும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் , தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும் எனக்கூறிய அவர், தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிபிட்ட அவர், எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *