யாழில் சமுர்த்தி உத்தியோகத்தர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை!

யாழ். இணுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.

இணுவில் மஞ்சத்தடி பகுதியில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமூர்த்தி உத்தியோகத்தர் தனது கடமைகளுக்காக சென்ற நிலையில் வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் நுழைந்து வீட்டில் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகையும் 20 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *