கோடியில் புரளும் கீர்த்தி சுரேஷ்.. அம்மாடியோ!

சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியிருந்தாலும் தமிழகத்தில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் தமிழில் இவர் நடித்து வெளியான ‘மகாநதி’ படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் உச்ச கதாநாயகியான விளங்கும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் இவர் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ள குட்லக் சகி மற்றும் மிஸ் இந்தியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

எனவே இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது ரூ. 1 கோடி சம்பளம் வாங்குவார். அதுமட்டுமில்லாமல் இவர் பயன்படுத்திவரும் இரண்டு கார்களின் மதிப்பு மட்டும் ரூ. 3.5 கோடி.

மேலும் இவர் தற்போது தங்கியிருக்கும் சொந்த வீட்டின் மதிப்பு ரூ. 5 கோடி ஆகும். ஆகமொத்தம் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ. 15 கோடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை ரசிகர்கள் ஆவலுடன் அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், வாயைப் பிளந்தபடி ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் இந்த தகவலை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *