புங்குடுதீவில் 3000 இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இன்றைய தினம் மேலும் 385 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து , புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், புங்குடுதீவு பகுதியிலிருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்ற நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *