வடக்கில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டு திட்டம்! பிரதமர் வழங்கியுள்ள உறுதி

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டில் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தியே வழங்கும் எனவும் அவர் உறுதி வழங்கியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த ஆட்சிகாலத்தில் வடக்கிற்கு இந்திய வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், சில கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

2018ம் ஆண்டில் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2019ம் ஆண்டுக்கும், 2019ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2020ம் ஆண்டுக்கும் என்ற ரீதியில் ஒதுக்கப்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.

இந்நிலையில், இந்த ஆண்டு முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் 2021ம் ஆண்டில் முழுமைப்படுத்தப்படும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *