உடை சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்.. மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் வந்த வேகத்திலேயே முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு விட்டார்.

தற்போது தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த படம் வெளிவர உள்ளது. இதில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளாராம்.

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் கைவசம் சில தெலுங்கு படங்களும் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் படப்பிடிப்புகள் தொடங்க பட்ட நிலையில் அனைத்து நடிகர் நடிகைகளும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கீர்த்தி சுரேஷ் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார். அப்போது கீர்த்தி சுரேஷ் நடிகை கத்ரீனா கைஃப் பயன்படுத்தியது போன்ற உடையை உடுத்தி வந்துள்ளார்.

இது ஒரு குத்தம் என, பாலிவுட் முதல் டோலிவுட் வரை நெட்டிசன்கள், காப்பி அடிப்பதற்கு ஒரு நியாயம் வேண்டாமா எனும் அளவுக்கு கீர்த்தி சுரேசை வைத்து செய்து வருகின்றனர்.

டிரஸ் போட்டால் மட்டும் கத்ரீனா கைஃப் ஆகிவிட முடியாது எனும் அளவுக்கு தரம் கெட்ட விமர்சனங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் மீது புகுத்தி வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *