இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பின்னர் அமைதியான சரத் வீரசேகர

மாகாண சபைகள் நாட்டுக்கு அவசியமற்றவை என பலத்த குரல் எழுப்பி வந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த உயர்ஸ்தானிகராலயம் விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாக்லே மற்றும் சரத் வீரசேகர இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும் இந்திய உயர்ஸ்தானிகருடனான இந்த சந்திப்பின் பின்னர், சரத் வீரசேகர, மாகாண சபைகள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடுவதை காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகள் முறைமை இலங்கைக்கு தேவையில்லை எனவும் அதனை ஒழிக்க வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்து வந்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *