கிளிநொச்சியில் பெருமளவான பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம்!

கிளிநொச்சி – முகமாலை தெற்குப் பகுதியில் விசமிகளால் வைக்கப்பட்ட தீயினால் பெருமளவான பனை மற்றும் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முகமாலை தெற்குப் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் காணிகளை துப்பரவு செய்த சிலர் அதன் குப்பைகளை காணியின் வேலியோரங்களில் குவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (27-08-2020) முகமாலை தெற்குப் பகுதியில் இவ்வாறு குவிக்ககப்பட்ட குப்பைக்கு விசமிகளால் வைக்கப்பட்ட தீயினால் பல பிரதேசங்களிலும் தீ பரவியதுடன், சுமார் 3 ஏக்கர் வரையான பரப்பளவில் காணப்பட்ட பனைமரங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

அத்துடன் மக்கள் குடியிருப்பு காணிகளுக்கு அடைக்கபபட்டிருந்த வேலிகளிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

நீண்ட நேரமாக தீயை அணைப்பதற்கு பிரதேச மக்கள் முயற்சித்த போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

உடனடியாகவே தீயணைப்பு படைப் பிரிவுக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் நீண்ட நேரத்தின் போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை மற்றும் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *