சுமந்திரனின் விசேட பாதுகாப்பு படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி), முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி உறுப்பினர் தனுபன் (தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 6 – 08- 2020 திகதி யாழ்.மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம்.

மிகவும் குறைந்தளவிலான யாழ்.தேர்தல் மாவட்ட வாக்குகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்காமல் வேண்டுமென்று மிக நீண்ட நேரத்திற்கு இழுத்தடிப்பு செய்தமைக்காக தாங்கள் அமைதியான முறையில் அங்கு ஒன்றுகூடி எதிர்ப்பினை தெரியப்படுத்தியிருந்தோம்.

அங்கு திடீரென்று வந்த சுமந்திரனும்,அவரது பாதுகாவலர்களும் தங்களையும், கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனையும் இன்னும் பலரையும் தாக்கினர்.

அந்த பகுதி யாழ்.மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவரது முடிவினை பெற்றுக்கொள்ளாது சுமந்திரனின் பாதுகாவலர்கள் இந்த ஜனநாயக விரோத செயலை தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டு மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *