யாழ்.கோட்டைக்கு ஹெலிகொப்படரில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்ட ரணில்!

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் பலாலி விமான நிலையத்திலிருந்து யாழ்.கோட்டைக்கு ஹெலிகொப்படர் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பிரதமரை வரவேற்றிருந்தனர்.

யாழில் இன்று நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய யாழ். மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு யாழ். மாநகர மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இக்கொடுப்பனவுகளை பிரதமர் ரணில் வழங்கி வைக்க உள்ளார்.

அதே போன்று வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளார்.

இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக யாழ். வந்துள்ள பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் யாழ். ஜெற்விங்ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

பிரதமரின் யாழ். விஐயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *