யாழில் அதிக வயதுடன் வாழ்ந்த இரண்டாவது மூதாட்டி மரணம்

யாழ்ப்பாணத்தில் மிக அதிக வயதுடைய பெண்கள் என சமூக சேவை திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டிருந்த இரண்டு பெண்களில் உயிருடன் இருந்த ஒருவர் காலமாகியுள்ளார்.

106 வயது வரை வாழ்ந்த குறித்த பெண் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

சின்னத்தம்பி வள்ளி என்ற இந்த மூதாட்டி யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் 1914ஆம் ஆண்டு 04ஆம் மாதம் 11ஆம் திகதி பிறந்துள்ளார்.

அவர் உயிரிழக்கும் போது அவருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட 69 பேர்கள் உள்ளார்கள் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மிக அதிக வயதுடைய வாழ்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட பெண்களில் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 104 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *