8 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு சிறுவர்கள் கைது!

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மேற்கு பகுதியில் 8 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சி செய்த சிறுவர்கள் இருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தொட்டியடி மேற்கு பகுதியில் ஆலய திருவிழா ஒன்றினை தொடர்ந்து சிறுவர், சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்த வேளை இரண்டு சிறுவர்கள் இணைந்து சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை கண்டவர்களால் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்களையும் கைது செய்த போது 14 வயதுடைய சிறுவனிடம் பெறுமதியான கையடக்க தொலைபேசி காணப்பட்டுள்ளது.

இதனை சோதனை செய்து பார்த்த பொலிசார், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக பெற்றோர்களினால் தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தொலைபேசி இணைய இணைப்பிற்காகவே பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கூகிள் தேடலில் பாலியல் தொடர்பான தேடல்களே அதிகளவில் தேடப்பட்டுள்ளமையும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இரண்டு சிறுவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *