தாயான, ஆலியா மானசாவிற்கு ஏற்பட்ட சோகம்.. கண் கலங்கும் கணவர் சஞ்சீவ்

“ராஜா ராணி” தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் தன்னுடன் கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திகை காதலித்து மணந்தார்.

ஆலியா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள்.

சமீபத்தில்தான் ஆலியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் இன் எண்ணிக்கை தற்போது 1 பில்லியனை தொட்டுள்ளதாக மகிழ்ச்சியாக உள்ளார் ஆலியா.

டிவி நடிகை ஒருவருக்கு இத்தனை பாலோயர்கள் இருப்பது இதுவே முதல் முறை என சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில் “நாங்கள் எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்தது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம் ஆனால்

இந்த மகிழ்ச்சியை கொண்டாடுகிற மனநிலை இப்போது இல்லை காரணம் உலகமே எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழல்தான். குழந்தை பிறந்ததை மகிழ்ச்சி அடையாமல் அனைவரும், பார்த்து இருங்கள், ஜாக்கிரதை என்று மட்டும் கூறி வருவது ஆலியாவிற்கு இன்னும் கவலையாக இருக்கிறதாம்.

இதை போர் என்று சொல்லுவது தவறு இல்லை. பிறந்த அடுத்த நொடியிலேயே, இந்தப் போருக்கு தயாராகி உள்ளார் எனது மகள்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *