கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் அடையாளந்தெரியாதோர் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில்

கிளிநொச்சி, செல்வா நகர் பகுதியில் சற்று முன்னர் அடையாளந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலினால் வெட்டு காயங்களுக்குள்ளான 9 பேர் கிளிநொச்சி பொது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் முகமூடி அணிந்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த 9 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *