ஈபிடிபியிடமே கொள்கை உள்ளது – மற்றவர்கள் மக்களை சூடேற்றுக்கின்றார்கள்:டக்ளஸ்

ஈபிடிபியிடம் மாத்திரமே மாற்றுக்கருத்தும், மாற்று கொள்கையும் இருப்பதுடன் ஏனைய கட்சிகள் மக்களை உசுப்பேற்றி சூடேற்றும் அரசியலையே செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வரலாற்று விடயங்களை தீர்ப்பதாக தெரிவித்து அதனைவிட பலமடங்கு பிரச்சனைகளை கடந்தகால தலைமைகள் எமது மக்களுக்கு கொடுத்திருக்கின்றார்கள்.

அதிலிருந்து மக்களை விடுவித்து, இருப்பதை பாதுகாத்துகொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் என்பதே எனது எண்ணம். அதனை ஒரு மாற்றுகொள்கையாகவும், பொறிமுறையாகவும் நான் முன் வைத்திருக்கின்றேன்.

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் சிறுபான்மை சார்ந்தோர் இல்லை என்று குற்றசாட்டு வந்திருக்கின்றது. தற்போது எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதில் சிறுபான்மையினரை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்தவிடயத்தில் சிறு தவறு நடந்திருக்கிறது அதனை திருத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அத்துடன் ஈரோஸ், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி ஆகியன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

ஈரோசின் ஸ்தாபக உறுப்பினர்களில் நானும் ஒருவர். ஈபிஆர்எல்எப்பிற்கு இரத்தமும் சதையும் கொடுத்து வளர்க்கப்பட்டது. ஆனால் இன்று அந்த பெயரே இல்லாமல் போகும் நிலமைதான் இருக்கிறது. அது அவர்களுடைய துரதிஸ்டம்.

எனவே வீணைச்சின்னத்திற்கு மாத்திரமே மாற்றுக்கருத்தும் மாற்று கொள்கையும் இருப்பதுடன் அதனை வெற்றிகொள்வதற்கான பொறிமுறையும் இருக்கிறது. ஏனைய கட்சிகளிடம் அது இல்லை. மக்களை உசுப்பேற்றி சூடேற்றும் அரசியலே அவர்களது கொள்கையாக உள்ளது.

வவுனியா பொருளாதார மையமானது மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது ஆலோசனைகளை பெற்றுகொண்டு அமைக்கப்படவில்லை.

அரசியல் உள்நோக்கத்துடன் மக்களின் எதிர்பார்ப்பிற்கு புறம்பான வகையில் பலகோடி நிதி செலவளிக்கப்பட்டுள்ளது.

அந்த கடைத்தொகுதியில் வவுனியா மாவட்ட மக்களிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்புடைய அமைச்சர் ஏற்றுகொண்டுள்ளார். விரைவில் அது உரியவர்த்தகர்களிற்கு பிரித்து வழங்கப்படும் என மேலும் கூறி கூறியுள்ளார்.

.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *