நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து வருவோர் இலக்கு! யாழ். மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை யாழ். மாவட்ட செயலகம் விடுத்துள்ளதாக மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

யாழ்ப்பாணத்தில் காணிகளுக்கு போலி உறுதிகளை தயார் செய்து அவற்றை விற்கும் சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மக்களின் காணிகளே இவ்வாறு சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகின்றன.

போலி உறுதிகள் தயார் செய்யப்பட்டு காணிகள் சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதன் பின் காணிகளை வாங்கியவர்கள் அதனை சட்டத்தரணிகள் ஊடாக சட்டரீதியாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே சட்டவிரோதமாக காணி விற்கப்பட்டு தாம் ஏமாற்றப்பட்டமை அவர்களுக்கு தெரிய வருகிறது.

எனவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மேற்படி சம்பவம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *