போதைப்பொருள் வியாபாரத்தை இராணுவத்தினரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்! சி.தவராசா

வடக்கில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்த சகல படைத் தரப்பினரையும் ஒன்றிணைத்து விரைவான செய்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றார்கள்.

போதைப்பொருள் வியாபாரத்தை இராணுவத்தினரால் கட்டுப்படுத்த முடியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தில், இன்று போதைப் பொருள் பாவனையால், எமது இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.

சகல படைத்தரப்பினரையும் ஒன்றிணைத்து, செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம் தான், போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

இது இளைஞர் சமூதாயத்தைப் காப்பாற்றுவதற்கான போராட்டம். இளம் சமூதாயத்தைக் காப்பாற்ற வேண்டும்.

அதேசமயம், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 50வது ஆண்டு அரசியல் பயணத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார். அது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

இதுவரை காலமும் மகிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தை கையாண்ட விதத்தில் இருந்து, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதில் இருந்து, கடந்த தேர்தலில் கூட கடும் விமர்சனத்திற்குள்ளாக்கி, கூட்டமைப்பினர் விமர்ச்சித்துவிட்டு, இன்று அவருக்கு புகழராம் சூட்டுவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நாடகம்.

மாகாண சபையை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அன்றி, ஜனாதிபதி நினைக்கும் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கியது.” என கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *