நேர்த்திக் கடனுக்காகத் தூக்குக் காவடி எடுத்தவருக்கு நடந்த கதி!

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில், நேர்த்திக்கடன் செய்யும் பொருட்டு வந்த தூக்குக்காவடியை பொலிஸார் வழிமறித்து திருப்பிய அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் குவிக்கப்பட்டு நேற்று பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.

முள்ளியவளை மகா விஷ்ணு ஆலயத்தில் இருந்து காட்டு விநாயகர் ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக தூக்கு காவடி எடுத்து வந்துள்ளார்கள்.

இதன்போது இவர்களை வழிமறித்த பொலிஸார் தூக்கு காவடியில் தொங்கியவரை இறக்கி, அவரது முதுகில் குத்தப்பட்டு இருந்த செடில்களை கழற்றிவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

காலம் காலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும், முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கும் எந்த தடைகள் வந்தாலும் நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள் இம்முறை மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *