பெருமளவான மதுபான போத்தல்களுடன் நெல்லியடி பொலிஸாரிடம் சிக்கிய குடிமகன்கள்

நெல்லியடி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதிபத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பொலிஸார் தமது பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட பகுதியில் நேற்றைய தினம் வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்போது நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதிபத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்களால் கொண்டு செல்லப்பட்ட பெருமளவு மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து பலரும் முண்டியடித்து வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *