கொரோனா வைரஸ் தொற்று! யாழைச் சேர்ந்தவர் பெல்ஜியத்தில் உயிரிழப்பு!

யாழ். மயிலிட்டியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பெல்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று (மே-12) உயிரிழந்துள்ளார்.

யாழ். மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த சுப்பையா-பிரதீப் (வயது-40) என்பவர் புலம்பெயர்ந்து பெல்ஜியத்தில் வசித்து வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சிகிச்சை பலனின்றி நேற்று (மே-12) உயிரிழந்துள்ளார். இவரது வீட்டில் உள்ள ஏனைய சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *